Share this link via
Personality Websites!
474582
9293
எஜமானே! எனக்கு இவ்வுலக நல்ல விடயங்களையும் வழங்கியருள்வாயாக * எஜமானே! எனக்கு மறுமையின் நல்ல விடயங்களையும் வழங்கியருள்வாயாக * எஜமானே! என் இல்லத்திற்கும் வீட்டாருக்கும் நல்லதை செய்தருள்வாயாக * கருணையாளனே! என் பிள்ளைகளை பாதுகாப்பாயாக * என் குடும்பத்தாரை பாதுகாப்பாயாக.
சற்று சிந்தித்துப் பாருங்கள்! நம்முடைய மொபைலில் இத்தனை எண்கள் சேமிக்கப்பட்டுள்ளதே, இவர்களில் *நம்முடைய சகோதரர்களின் எண்கள் இருக்கின்றன * நெருங்கிய உறவினர்களின் (Relatives) எண்கள் இருக்கின்றன * நண்பர்களின் எண்கள் இருக்கின்றன, நாம் எப்போதாவது இந்த மக்களுக்காகவும் துஆ செய்திருக்கிறோமா? எப்போதாவது துஆ செய்யும் நேரத்தில் இந்த மக்களின் நினைவு நமக்கு வந்திருக்கிறதா? நான் மிக தூரமானவர்களைப் பேசவில்லை, இவர்கள் எங்காவது ஒரு இடத்தில் நம்மோடு தொடர்பு உடையவர்களாக அல்லது தொடர்பு இருந்தவர்களாக இருக்கக்கூடிய மக்கள். நாம் இவர்களுக்காகக் கூட துஆ செய்வதில்லை, அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் நன்னடத்தையினைப் பாருங்கள்! அவர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள், எந்தளவு என்றால் தங்களின் முரீதீன்களின் பெயர்களைக் கூட ஒரு பட்டியலாகத் தயாரித்து வைத்திருந்தார்கள். மேலும் அர்ப்பணமாகி விடுங்கள்! கூறுகிறார்கள்: இந்த அனைத்துப் பெயர்களும் எனக்கு மனப்பாடமாக நினைவிருக்கின்றன, தினந்தோறும் பெயர் கூறி இவர்களுக்காக நான் துஆக்கள் செய்கிறேன்.
முஸ்லிம்களுக்காக துஆ செய்து வாருங்கள்!
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! நாமும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்காக துஆக்கள் செய்ய வேண்டும், அதன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தஃபா صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமான ஆண்களுக்காகவும் இன்னும் பெண்களுக்காகவும் பாவமன்னிப்புத் தேடி துஆ செய்கிறாரோ, அல்லாஹு தஆலா அவருக்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணிற்குப் பகரமாக ஒரு நன்மையை வழங்குகிறான். (ஜாமிஉஸ் ஸஙீர், பக்கம்: 513, ஹதீஸ்: 8419)
سُبْحٰنَ اللہ! கணக்கிட்டுப் பாருங்கள்! ஹழ்ரத் ஆதம்عَلَیْہ ِالسَّلام அவர்கள் முதற்கொண்டு இதுவரையிலும் கோடானகோடி முஸ்லிம்கள் இவ்வுலகிற்கு வருகை தந்துள்ளனர், நாம் செய்ய வேண்டியது இந்த துஆ தான்:
اَللّٰہُمَّ اغْفِرْ لِیْ وَ لِکُلِّ مُؤْمِنٍ وَ مُؤْمِنَۃٍ
(யா அல்லாஹ்! என்னையும் இன்னும் அனைத்து முஸ்லிமான ஆண்களையும் பெண்களையும் மன்னித்தருள்வாயாக) இதன் பரகத்தினால் اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! கோடானகோடி நன்மைகள் கைசேரும். அல்லாஹு தஆலா இந்த பாக்கியத்தை வழங்கியருள்வானாக.
اٰمِیْن بِجَاہِ خَاتَمِ النَّبِیّٖن صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
ஜனாஸாவில் அதிகளவில் துஆக்கள் கேட்பார்கள்
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஃலா ஹழ்ரத் இமாமே அஹ்லே சுன்னத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் இரக்கமுள்ள நல்மனதைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜனாஸாக்களில் கலந்து கொள்வார்கள், மேலும் ஜனாஸாவின் போதும், ஜனாஸாவுக்குப் பிறகும் மரணித்தவருக்காக அதிகளவில் துஆ செய்வதன்
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami