Share this link via
Personality Websites!
474581
9293
ஒரு பொருளைப் பற்றித்தான் நினைவு கூறப்படும்
ஒருமுறை ஒரு நபர் ஹழ்ரத் ராபியா பஸரிய்யா رَحمۃُ اللہِ علیہا அவர்களுக்கு முன்னிலையில் உலகத்தைப் பற்றிப் பேசினார், அப்போது அவர்கள் கூறினார்கள்: மதிப்புமிக்க பொருளைப் பற்றித் தான் நினைவு கூறப்படும், எதற்கு எந்தவொரு மதிப்பும் (Value) இல்லையோ அதைப்பற்றி பேசப்படுவதில்லை.
(தாரீகுல் இஸ்லாம் லித் தஹபி, பாகம்: 4, பக்கம்: 548)
விளங்கிக் கொள்ள முடிகிறது, உலக விஷயங்களைப் பேசுவதை விட்டும் தவிர்ந்து கொள்வதே மிகச் சிறந்தது. அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் திக்ரை செய்துக் கொள்ளுங்கள்! سُبْحٰن اللہِ، اَلْحَمْدُ لِلہِ போன்ற தஸ்பீஹுகளை ஓதிக் கொள்ளுங்கள், இதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
(4) அஃலா ஹழ்ரத் அவர்கள் துஆக்கள் செய்து வந்தார்கள்
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! இப்போது அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் ஒரு தனித்துவமான முபாரக்கான பழக்கத்தைக் கேளுங்கள்! அஃலா ஹழ்ரத் இமாமே அஹ்லே சுன்னத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமிடமும் மிக அதிக அன்பு காட்டக்கூடியவராக இருந்தார்கள், அவர்கள் தங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது அந்நியராக இருந்தாலும் சரி, அனைவர் மீதும் இரக்கமும் நன்நாட்டமும் கொள்ளும் மகத்தான உணர்வைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் رَحمۃُ اللہِ عَلَیْہ தன்னை பின்தொடர்பவர்கள் மீது எந்தளவு கவனம் செலுத்தினார்கள் என்றால், தங்களின் * உறவினர்கள் * நெருங்கியவர்கள் *நண்பர்கள் மற்றும் * பிரத்தியேகமான முரீதுகளின் பெயர்களைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலைத் தயாரித்து வைத்திருந்தார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தங்களின் அவ்ராத்கள் மற்றும் வழீஃபாக்களின் இறுதியில், இவர்கள் அனைவருக்காகவும் பெயர் பெயராகக் குறிப்பிட்டு துஆ செய்வார்கள். தங்களுடைய பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டார்கள். ஸய்யித் அய்யூப் அலி ஸாஹிப் அவர்கள் கூறுகிறார்கள்: ஒருநாள் நான் மிகுந்த கவலையில் இருந்தேன், அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சமூகத்தில் துஆ செய்யுமாறு வேண்டினேன். அவர்கள் துஆ செய்ததோடு, எனக்கும் எனது சகோதரர் ஸய்யித் கனாஅத் அலி அவர்களுக்கும் கூறினார்கள்: உங்களிருடைய பெயரையும் நான் துஆவுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டேன், அது படிப்படியாக மிக நீளமாக ஆகிவிட்டது. இந்த எல்லாப் பெயர்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன, தினந்தோறும் பெயர் பெயராகக் குறிப்பிட்டு அனைவருக்காகவும் துஆ செய்கிறேன்.
(ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 180)
سُبْحٰنَ اللہ! எவ்வளவு அழகான ஒரு குணம்...! நாம் சற்று நம்மைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம், மிக தூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏதேனும் ஒரு நாளில் உங்களுடைய மொபைலை மட்டும் ஆய்வு செய்து பாருங்கள்! மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொடர்பு பட்டியலை (Contact List) திறந்து பாருங்கள்! இதில் எத்தனை நபர்களின் எண்கள் சேமிக்கப்பட்டுள்ளன, நிச்சயமாக யாருடைய எண் சேமிக்கப்பட்டுள்ளதோ, எங்காவது ஒரு இடத்தில் உங்களுக்கும் அவருக்கும் இடையில் ஏதேனும் ஒரு தொடர்பு கட்டாயம் இருந்திருக்கும். இப்போது சற்று சிந்தித்துப் பாருங்கள்! நாம் தொழும் போது, நம் ரப்பிற்கு முன்னிலையில் துஆவிற்காகக் கைகளை ஏந்தும் போது, நமக்காக நாம் எவ்வளவோ விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம், உதாரணமாக *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami