Share this link via
Personality Websites!
474579
9293
(மிர்காதுல் மஃபாதீஹ், கிதாபுஸ் ஸலாத், பாகம்: 2, பக்கம்: 418, ஹதீஸ்: 743 இன் கீழ்)
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! நாம் மஸ்ஜிதைக் கண்ணியப்படுத்த வேண்டும் *மஸ்ஜித் அல்லாஹு தஆலா வின் இல்லமாகும் *அது வணக்க வழிப்பாட்டிற்குரிய இடமாகும் *அல்லாஹ்வின் நினைவில் மூழ்குவதற்கும் * துன்யாவை துண்டித்து விட்டு தன் ரப்பளவில் கவனத்தை திருப்புவதற்குரிய இடமாகும் * இத்தகைய பரிசுத்தமான * இத்தகைய தூய்மையான * மற்றும் மிக உயர்ந்த அந்தஸ்துள்ள இடத்திற்கு வந்தும்கூட நாம் பாவங்களையே செய்வோம், மரியாதைக் குறைவாகவே நடந்து கொள்வோம் என்றால், நாம் எங்கே போய் சீர்திருந்துவது? எனவே, மஸ்ஜிதைக் கண்ணியப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹு தஆலா நமக்கும் மஸ்ஜிதின் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக!
اٰمِیْن بِجَاہِ خَاتَمِ النَّبِیّٖن صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم
(2) வலது கையைக் கொண்டே கொடுக்கல், வாங்கல் செய்து வந்தார்கள்
அஃலா ஹழ்ரத், இமாமே அஹ்லே சுன்னத் இமாம் அஹ்மத் ரZஸா கான் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் முபாரக்கான பழக்கம் என்னவென்றால், வலது கையைக் கொண்டே எதையும் கொடுப்பதும் வாங்குவதுமாக இருந்தார்கள். மலிகுல் உலமா, அஃலா ஹழ்ரத்தின் கலீஃபாவும், மாணவருமான முஃப்தி ஸய்யித் முஹம்மத் ழஃபருத்தீன் பிஹாரி رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் தங்களின் 'ஹயாத்தே அஃலா ஹழ்ரத்' என்ற நூலில் எழுதுகிறார்கள்: ஒருவருக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க வேண்டியிருக்கும் போது, அவர் வாங்குவதற்காக இடது கையை நீட்டினால் அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் உடனடியாகத் தங்களின் கையை நிறுத்தி விடுவார்கள், மேலும் 'வலது கையில் வாங்குங்கள், இடது கையால் ஷைத்தான் வாங்குகிறான்' என்று கூறுவார்கள்.
(ஹயாத்தே அஃலா ஹழ்ரத், பாகம்: 1, பக்கம்: 189)
வலது கையைக் கொண்டு கொடுக்கல், வாங்கல் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! நாமும் எதைப் பெறுவதாக இருந்தாலும், கொடுப்பதாக இருந்தாலும் அல்லது கண்ணியத்திற்குரிய எந்தவொரு காரியமாக இருந்தாலும், அதை வலது கையைக் கொண்டே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஹழ்ரத் அபூஹுரைரா رَضِیَ اللہُ عنہ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகளார் صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் வலது கையால் சாப்பிடட்டும், வலது கையால் குடிக்கட்டும், வலது கையால் வாங்கட்டும் மற்றும் வலது கையால் கொடுக்கட்டும். ஏனெனில் ஷைத்தான் இடது கையால் சாப்பிடுகிறான், இடது கையால் குடிக்கிறான், இடது கையால் கொடுக்கிறான் மற்றும் இடது கையால் வாங்குகிறான்.
(இப்னு மாஜா, கிதாபுல் அத்இமா, பாபுல் அக்லி பில் யமீன், பக்கம்: 532, ஹதீஸ்: 3266)
முஸ்லிம்களின் அன்னை ஹழ்ரத் ஆயிஷா ஸித்தீகா رَضِیَ اللہُ عنہا அவர்கள் கூறுகிறார்கள்: பெருமானார் صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் வலது பக்கத்திலிருந்து வுழு செய்வதை விரும்பினார்கள், இதே போன்று தலை வாரும் போதும் வலது பக்கத்திலிருந்தே வாரினார்கள், எந்தளவுக்கு என்றால் புனித பாதணிகளை அணிய நாடினாலும் கூட முதலில் வலது காலை புனித பாதணியினுள் நுழைப்பார்கள்.
(ஷமாயிலே முஹம்மதிய்யா, Bபாபு மாஜாஅ ஃபீ நஃலி ரசூலில்லாஹி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم, பக்கம்: 189, ஹதீஸ்: 85)
இந்த 3 காரியங்கள் மட்டுமல்ல, மாறாக கண்ணியம் மற்றும் மகத்துவத்திற்குரிய
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami