Share this link via
Personality Websites!
474578
9293
سُبْحٰنَ اللہ! அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! மஸ்ஜிதினுள் நுழையும் போது முதலில் வலது காலை உள்ளே வைக்க வேண்டும் என்பது சுன்னத்தாகும். அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சுன்னத்தின் மீதான அன்பைப் பாருங்கள், எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும், வெளிப்படையாகப் பார்த்தால் கவனக்குறைவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும் * அவர்களுடைய சிந்தனைகளில் * அவர்களுடைய பழக்கவழக்கங்களில் *அவர்களுடைய எண்ணங்களில் எந்நேரமும் சுன்னத்தின் சிந்தனைகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. இத்தகைய அவசர நிலையிலும் கூட மஸ்ஜிதின் ஒவ்வொரு பகுதியிலும் வலது காலைக் கொண்டே ஆரம்பம் செய்கிறார்கள்.
ஆஹ்! மஸ்ஜிதின் இத்தகைய மரியாதை நமக்கும் கிடைக்கப் பெற வேண்டுமே. கைசேதமே! இன்றைய கால கட்டத்தில் நிலைமைகள் மிகவும் சீர்கெட்டுப் போய்விட்டன, மக்கள் மஸ்ஜிதின் கண்ணியத்தை மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர் *மஸ்ஜிதினுள் நுழைவதற்கான சுன்னத்துகள் என்ன? *மஸ்ஜிதிலிருந்து வெளியேறுவதற்கான சுன்னத்துகள் என்ன? *மஸ்ஜிதில் தங்கியிருப்பதற்கான சுன்னத்துகள் என்ன? என்பது மிகக்குறைந்த மக்களுக்கே தெரிந்திருக்கிறது, பின்பு சூழ்நிலைகளைப் பாருங்கள்! * யாரோ ஒருவர் மஸ்ஜிதில் பேசிக் கொண்டிருக்கிறார் *யாரோ ஒருவர் உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார் * வீணான அரட்டைகளில் மூழ்கியிருக்கிறார்கள் *மஸ்ஜிதினுள் இசை மெட்டுகள் (மியூசிகல் டியூன்ஸ்) ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மஸ்ஜிதானது ஷைத்தானிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரு வலுவான கோட்டையாகும், ஆனால் வருந்தத்தக்க விஷயம்! நாம் சுன்னத்தைப் பின்பற்றாத போது இங்கேயும் கூட நப்ஸ் மற்றும் ஷைத்தானின் பிடியில் சிக்கி விடுகிறோம், கைசேதம்! * இப்போது மஸ்ஜித்களிலேயே சண்டை சச்சரவுகளும் நடைபெருகின்றன *புறம் பேசுதல்களும் நடக்கின்றன * கோள் மூட்டுதல்களும் நடக்கின்றன *செய்யக்கூடியவர்கள் கேலி கிண்டல்களையும் கூட செய்து விடுகிறார்கள். இந்த ஹதீஸ் ஷரீஃபை கேளுங்கள்! மேலும் இது எவ்வளவு கடுமையான பாவம் என்பதை இதிலிருந்து படிப்பினை பெறுங்கள்.
அவர்களுக்கு அல்லாஹ்விடம் எந்தத் தேவையும் இல்லை
இறுதி நபி, முஹம்மது அரபி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் கூறினார்கள்: மனிதர்களுக்கு மத்தியில் ஒரு காலம் வரும், அப்போது மஸ்ஜிதுகளில் துன்யாவின் பேச்சுகள் பேசப்படும். நீங்கள் அவர்களுடன் அமர வேண்டாம், ஏனெனில் அவர்களுக்கு அல்லாஹ்விடம் எந்தவொரு தேவையும் இல்லை.
(ஷுஅபுல் ஈமான், பாப் ஃபிஸ் ஸலவாத், பாகம்: 3, பக்கம்: 87, ஹதீஸ்: 2962)
ஹதீஸ் ஷரீஃபில் வந்துள்ளது:
اَلضِّحْکُ فِی الْمَسْجِدِ ظُلُمَۃٌ فیِ الْقَبْرِ
அதாவது மஸ்ஜிதில் சிரிப்பது மண்ணறையில் இருளை ஏற்படுத்துகிறது.
(ஜாமிஉஸ் ஸஙீர், பக்கம்: 322, ஹதீஸ்: 5231)
அனுமதிக்கப்பட்ட (முபாஹான) பேச்சுகள் நன்மைகளைச் சாப்பிட்டு விடுகின்றன
ஹழ்ரத் அல்லாமா அலி காரி رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்): اَلْکَلَامُ الْمُبَاحُ فِی الْمَسْجِدِ مَکْرُوْہٌ یَأْکُلُ الْحَسَنَاتِ அதாவது மஸ்ஜிதில் முபாஹான (அதாவது அனுமதிக்கப்பட்ட) பேச்சுகளைப் பேசுவது மக்ரூஹ் ஆகும், மேலும் அது நன்மைகளைச் சாப்பிட்டு விடுகிறது.
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami