Share this link via
Personality Websites!
474577
9293
பாதையின் பயணியாக மாறுங்கள் * மேலும், அவர்கள் எந்த முறையில் வாழ்க்கை நடத்தினார்களோ, நீங்களும் அவர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்று அதே முறையில் வாழ்க்கை நடத்துங்கள்!
(தஃப்சீர் நயீமி, பாரா: 11, சூரா அத்தவ்பா, ஆயத்: 119 இன் கீழ், பாகம்: 11, பக்கம்: 115)
الحمد للہ! நமது தலைவர் அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களும் ஒரு வலீயே காமில் ஆவார்கள். அவர்களும் உண்மையானவர்கள், அவர்களுடைய அகீதாக்களும் உண்மையானவை, அவர்களுடைய கோட்பாடுகளும் உண்மையானவை, அவர்களுடைய போதனைகளும் உண்மையானவை, மேலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் ரசூலுல்லாஹி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களின் சுன்னத்தின் பிரதிபலிப்பாகவும், உண்மையான பாதையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
வாருங்கள்! குர்ஆனின் கட்டளைப்படி செயல்படும் எண்ணத்துடன் ஒரு வலீயே காமிலின் (முழுமையான இறைநேசரின்) சில முபாரக்கான பழக்கவழக்கங்களைக் கேட்போம்! மேலும், நாமும் இந்த நற்பண்புகளைப் பின்பற்றி நம்முடைய வாழ்க்கையைச் சீரமைக்க முயற்சிப்போம் என்று நிய்யத் செய்துக் கொள்வோம்!
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் அழகான பழக்கவழக்கங்களின் ஒரு சிறப்பம்சம் (Quality) என்னவென்றால், அவர்கள் தனது வாழ்க்கையின் அடித்தளத்தை ரசூலுல்லாஹி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களின் சுன்னத்தின் மீது அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு செயலிலும் சுன்னத்தைப் பின்பற்றுவதற்கு முழுமையாக முயற்சிப்பார்கள். மேலும் எந்தெந்த முறைகளில், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எல்லாம் அவர்கள் சுன்னத்துகளின்படி செயல்பட்டார்கள்? கேளுங்கள்! ஸய்யித் அய்யூப் அலி சாஹிப் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் ஃபஜ்ர் தொழுகையின் நேரமாக இருந்தது, மக்கள் ஜமாஅத் தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். வழக்கத்திற்கு மாறாக அன்று அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் வருவதற்கு சற்று தாமதமாகி விட்டது, அனைவரின் பார்வைகளும் அவர்களின் வீட்டை நோக்கியே இருந்தன. இந்த நேரத்தில் அவர்கள் رَحمۃُ اللہِ عَلَیْہ அவசர அவசரமாக வருகை தந்தார்கள். அப்போது மௌலானா கனாஅத் அலி என்னிடம் கூறினார்: 'இந்தக் குறுகிய நேரத்திலும் அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் தங்களின் வலது காலை மஸ்ஜிதினுள் முதலில் வைக்கிறார்களா அல்லது இடது காலை வைக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்...!! 'இப்போது எங்களுடைய பார்வைகள் அவர்களின் கால்களை நோக்கியே இருந்தன. சுப்ஹானல்லாஹ்! அர்ப்பணமாகி விடுங்கள்! அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சுன்னத்தின் மீதான அன்பு எவ்வளவு தனித்துவமானது *மஸ்ஜிதின் படியில் முபாரக்கான கால் பதியும் போது வலது கால் * மஸ்ஜிதின் தரையில் கால் பதியும் போதும் வலது கால் * தரையின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு கால் பதியும் போதும் வலது கால் *முன்னால் மஸ்ஜிதின் முற்றத்தில் ஒரு சஃப் (தொழுகை வரிசை) விரிக்கப்பட்டிருந்தது, அதன் மீது கால் பதியும் போதும் வலது கால், இத்துடன் மட்டும் முடிந்து விடவில்லை *ஒவ்வொரு சஃப்பிலும் முதலில் வலது காலையே வைத்தார்கள் * மிஹ்ராபுக்கு வருகை தரும் வரை * முஸல்லா (தொழுகை விரிப்பு) மீது கால் வைத்த போதும் முதலில் வலது காலையே வைத்தார்கள்.
(ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 120)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami