Share this link via
Personality Websites!
474576
9293
புசிப்பார்கள், மேலும் குறைவாகவே உறங்குவார்கள். *அவர்கள் رَحمۃُ اللہِ عَلَیْہ 25 ஸஃபருல் முழஃப்பர் 1340 ஹிஜ்ரிக்கு அதாவது 28 அக்டோபர் 1921 வெள்ளிக்கிழமை அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். *அவர்களுடைய அடக்கஸ்தலம் பரேலி ஷரீஃபில் உள்ளது. 25 ஸஃபருல் முழஃப்பர் அன்று உலகம் முழுவதும் அவர்களுடைய உர்ஸ் கொண்டாடப்படுகிறது.
(ஃபைZஸானே இமாமே அஹ்லே சுன்னத் (சிறப்பு மலர்), பக்கம்: 22 முதல் 24 வரை, சுருக்கமாக)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
உண்மையாளர்களுடன் ஆகிவிடுமாறு குர்ஆனின் கட்டளை
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் நமக்கு உண்மையாளர்களுடன் இருக்குமாறு கட்டளையிட்டுள்ளான். பாகம்: 11, சூரா அத்தவ்பா, வசனம்: 119 இல் அல்லாஹு தஆலா கூறுகிறான்:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ كُوْنُوْا مَعَ الصّٰدِقِیْنَ(۱۱۹)
கன்Zஸுல் இர்ஃபான் மொழிபெயர்ப்பு: ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், மேலும் உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்.
பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார் கான் நயீமி رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் இந்த திருவசனத்திற்கு வழங்கிய விளக்கவுரையின்படி, இந்த ஆயத்தில் 'ஸாதிகீன்' (அதாவது உண்மையாளர்கள்) என்பதில் 3 வகையான மக்கள் நாடப்படுகிறார்கள்: (1) சங்கையான ஸஹாபாக்கள் (2) ஆஷிகே ரசூல் உலமாக்கள் மற்றும் (3) சங்கையான அவ்லியாக்கள்.
(தஃப்சீர் நயீமி, பாகம்: 11, சூரா அத்தவ்பா, வசனம்: 119 இன் கீழ், பாகம்: 11, பக்கம்: 115, சுருக்கப்பட்டது)
இப்போது இந்த ஆயத்தின் பொருள் இவ்வாறு அமையும்: ஈமான் கொண்டவர்களே! ஸஹாபாக்களுடன் இருங்கள், ஈமான் கொண்டவர்களே! உலமாக்களுடன் இருங்கள், ஈமான் கொண்டவர்களே! அவ்லியாக்களுடன் இருங்கள்.
மேலும், இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், 'உடன் இருப்பது' என்பதன் பொருள் என்ன? பொதுவாக ஒருவருடன் இருப்பதற்கு 2 அர்த்தங்கள் உள்ளன: (1) உடல் ரீதியாக உடன் இருப்பது (2) உள்ளத்தால் (மனதால்) உடன் இருப்பது. நிச்சயமாக, உடல் ரீதியாக சங்கையான ஸஹாபாக்கள் رَضِیَ اللہُ عنہم அவர்களின் நெருக்கம் கிடைப்பதும், ஆஷிகே ரசூல் உலமாக்களின் தோழமை நசீபாகுவதும், சங்கையான அவ்லியாக்களின் தோழமை நசீபாகுவதும் சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய பாக்கியத்திற்குரிய விஷயமாகும். ஆனால், இந்த திருவசனத்தில் உடல் ரீதியாக மட்டும் உடன் இருப்பது நாடப்படவில்லை, மாறாக இதன் பொருள்: உள்ளத்தால் சங்கையான ஸஹாபாக்கள், உலமாக்கள் மற்றும் அவ்லியாக்களுடன் இருப்பது ஆகும். இதன் நோக்கம் என்னவென்றால்: ஈமான் கொண்டவர்களே! ஸஹாபாக்கள், உலமாக்கள், அவ்லியாக்களுடன் *உள்ளத்தால் அன்பு வையுங்கள் *அவர்களுடைய அகீதாக்கள் (கொள்கைகள்) எதுவோ, அந்த அகீதாக்களை நீங்களும் பின்பற்றுங்கள் * அவர்களுடைய கோட்பாடுகள் எதுவோ, அந்த கோட்பாடுகளை நீங்களும் பின்பற்றுங்கள் * அவர்களுடைய போதனைகளின்படி செயல்படுங்கள் *அவர்களைப் போன்ற நற்பண்புகளை ஏற்படுத்துங்கள் *அவர்களைப் போன்ற நன்னடத்தையை உருவாக்குங்கள் *அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒளியைப் பெற்றுக் கொள்ளுங்கள் * வெளிப்படையாகவும் * மறைமுகமாகவும் அனைத்து நிலைகளிலும் அவர்களை நேசியுங்கள் *இந்தப் பரிசுத்தமான பெருமக்கள் எந்தப் பாதையின் பயணியாக இருக்கின்றார்களோ, நீங்களும் அந்தப்
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami