Share this link via
Personality Websites!
474595
9293
குறையை மற்றவரிடத்தில் வெளிப்படுத்த வில்லையே? (45) தஃப்சீர் செவியேற்கும் மற்றும் செவியேற்கச் செய்யும் அமர்வை நடத்தினீர்களா அல்லது அதில் பங்கெடுத்தீர்களா? (46) ஒவ்வொரு அனுமதிக்கப்பட்ட மற்றும் கண்ணியமான காரியத்திற்கு முன்பும் பிஸ்மில்லாஹ் ஓதினீர்களா? (47) நாற்சந்தியில் நடாத்தப்படும் தர்ஸை கொடுத்தீர்களா அல்லது செவியுற்றீர்களா? (48) உங்களது பெற்றோர்கள் இன்னும் ஆன்மீக குருவின் (ஷெய்கின்) பாவமன்னிப்பிற்காக துஆ மற்றும் ஈஸாலே ஸவாப் (நன்மையைச் சேர்த்தல்) செய்தீர்களா? (49) மஸ்ஜித், வீடு, அலுவலகம் போன்றவற்றில் வீண் விரயம் செய்வதிலிருந்து தவிர்ந்திருக்க முயற்சி செய்தீர்களா? (50) போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தீர்களா?
(51) ஏதேனும் ஒரு இஸ்லாமிய சகோதரரிடமிருந்து (குறிப்பாக பொறுப்பாளரிடமிருந்து) அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், ஏதேனும் தவறு நிகழ்ந்து அதனைச் சீர்திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், எழுத்துப்பூர்வமாகவோ அல்லது சந்தித்தோ, நேரடியாக (மென்மையாக) புரிய வைக்க முயற்சி செய்தீர்களா? அல்லது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், மார்க்க அனுமதியின்றி அதனை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி புறம் பேசுதல் என்ற பெரும்பாவத்தைச் செய்து விட்டீர்களா? (52) நாவை பாவங்களிலிருந்து (அதாவது பழிசுமத்துதல், உள்ளத்தை காயப்படுத்துதல், கெட்ட வார்த்தைகள் பேசுதல் போன்றவற்றிலிருந்து) பாதுகாத்தீர்களா? (53) நாவை வீணான பேச்சுகளிலிருந்து (அதாவது தீனுக்கோ அல்லது உலகிற்கோ பிரயோஜனம் தராத உரையாடல்களிலிருந்து) பாதுகாக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகச் சைகை மூலமாக ஏதேனும் உரையாடினீர்களா? (54) (வீட்டிலும் வெளியிலும்) கேலி கிண்டல் செய்தல், நையாண்டி செய்தல், உள்ளங்களை காயப்படுத்துதல் மற்றும் வாய்விட்டு உரக்கச் சிரித்தல் (கலகலவெனச் சிரித்தல்) போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருக்க முயற்சி செய்தீர்களா? (55) இமாமா ஷரீஃப் (தலைப்பாகை) அணிந்தீர்களா? (56) தாய், தந்தைக்குரிய மரியாதை மற்றும் கண்ணியத்தையும் பேணி நடந்தீர்களா?
* எழுத்து மூலம் உரையாடுதல் 12 முறை * சைகை மூலம் உரையாடுதல் 12 முறை * உற்று நோக்காமல் உரையாடுதல் 12 முறை
(57) இந்த வாரம் உங்களது இல்லத்திலிருந்து ஏதேனும் ஒரு இஸ்லாமிய சகோதரியை (உதாரணமாக: சகோதரி/ மகள்/ தாய்/ குழந்தைகளின் தாய் போன்றோரை) இஸ்லாமிய சகோதரிகளின் இஜ்திமாவிற்கு அனுப்பி வைத்தீர்களா? (58) வாராந்திர மதனி முzஸாகரா பார்ப்பதற்கு/ செவியுறுவதற்கான பாக்கியத்தைப் பெற்றீர்களா? (59) வாராந்திர சுன்னத்துகள் நிறைந்த இஜ்திமாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை (அதாவது மஃரிப் தொழுகை முதல் இஷ்ராக் மற்றும் ச்சாஷ்த் தொழுகை வரை) பங்கெடுத்தீர்களா? (60) இந்த வாரம் விடுமுறை நாள் இஃதிகாஃப் செய்யும் பாக்கியத்தைப் பெற்றீர்களா? (61) இந்த வாரம் குறைந்தது ஏதேனும் ஒரு நோயாளி அல்லது கவலையில் இருப்பவரை அவரது இல்லத்திற்கு அல்லது மருத்துவமனைக்குச் சென்று சுன்னத்தான முறைப்படி நலம் விசாரித்தீர்களா அல்லது ஆறுதல் கூறினீர்களா அல்லது உறவினரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதை செய்தீர்களா? (62) இந்த வாரம் திங்கட்கிழமை (அல்லது அது விடுபட்டுப் போகும் பட்சத்தில் ஏதேனும் ஒரு நாளில்) நோன்பு நோற்றீர்களா? (63) வாராந்திர இதழை படித்தீர்களா அல்லது செவியுற்றீர்களா? (64) இந்த வாரம் குறைந்தது ஒரு முறையாவது வட்டாரப் பயணம் (Area Visit) செய்தீர்களா? (65) இந்த வாரம் குறைந்தது ஒரு இஸ்லாமிய சகோதரரையாவது (யார் இதற்கு முன்பு தீனுடைய சூழலில் இருந்தாரோ, அல்லது முன்பு இஜ்திமாவிற்கு வந்து தற்போது வராமல் இருக்கிறாரோ அவரைத்) தேடி, மீண்டும் அவரைத் தீனுடைய சூழலுடன்
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami