Share this link via
Personality Websites!
474594
9293
உறங்குவதற்கு முயற்சி செய்தீர்களா? (20) தஃவதே இஸ்லாமியின் தீனுடைய பணிகளுக்கு உங்களது பொறுப்பாளர் கொடுத்த அட்டவணைப்படி குறைந்தது இரண்டு மணி நேரம் ஒதுக்கினீர்களா?
(21) ஸதாயே மதீனா (பஜ்ர் தொழுகைக்கு மக்களை எழுப்பும் பணி) செய்தீர்களா? (22) உங்களது வீட்டின் ஜன்னல்களிலிருந்து (தேவையின்றி) வெளியிலோ அல்லது மற்றவர்களின் கதவுகள் வழியாக அவர்களின் வீட்டிற்குள்ளோ எட்டிப் பார்ப்பதிலிருந்து தவிர்ந்திருக்க முயற்சி செய்தீர்களா? (23) உங்கள் இல்லத்தில் தர்ஸ் (வீட்டு தர்ஸ்) நடைபெற்றதா? அல்லது ஏதேனும் காரணத்தினால் நீங்கள் இல்லாத சமயத்தில் உங்களது வீட்டில் தர்ஸ் நிகழ்ந்ததா? (24) குறைந்தது ஒரு மதனி தர்ஸ் (பள்ளிவாசல், கடை, கடைவீதி போன்ற எங்கு வசதியோ அங்கு) கொடுத்தீர்களா அல்லது செவியுற்றீர்களா? (25) சுன்னத்தான முறைப்படி ஆடைகளை (பெண்களின் ஆடைகளைப் போன்ற பளிச்சென்ற நிறங்கள் அல்லது பளபளப்பானதாக இல்லாத, அல்லது மார்க்க ரீதியாகத் தடைசெய்யப்பட்ட நிறங்கள் இல்லாதவாறு) அணிந்தீர்களா? (26) தலைமுடி (ஸுல்ஃபே) வைக்கும் சுன்னத்தைப் பேணுகிறீர்களா? (27) தாடியை மழிப்பதோ அல்லது ஒரு பிடிக்குக் குறைவாக வெட்டுவது போன்ற பாவத்தைச் செய்யவில்லையே? (28) ஏதேனும் பாவம் நிகழ்ந்து விட்டால் உடனே தவ்பா செய்தீர்களா? (29) சுன்னத்தான முறைப்படி உணவு உட்கொண்டீர்களா மேலும் உணவிற்கு முன்னும் பின்னும் ஓதும் துஆக்களை ஓதினீர்களா? (30) வீடு, அலுவலகம், பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும் போதும் வரும் போதும், மற்றும் தெருக்களில் கடந்து செல்லும் போதும் அங்கு நின்று கொண்டிருக்கின்ற அல்லது அமர்ந்திருக்கின்ற முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறினீர்களா?
(31) இந்த சுன்னத்துகளில் ஏதேனும் சிலவற்றைச் செயல் படுத்தினீர்களா? (மிஸ்வாக் செய்தல், வீட்டிற்குள் நுழைதல் மற்றும் வெளியேறுதல், உறங்குதல் மற்றும் விழித்தல், கிப்லா நோக்கி அமருதல் போன்றவைகள்)? (32) ளுஹர் தொழுகையின் நான்கு முந்தைய சுன்னத்துகளை ஃபர்ளு தொழுகைக்கு முன் நிறை வேற்றினீர்களா? (33) தஹஜ்ஜுத் தொழுகை தொழுதீர்களா? அல்லது இரவில் உறங்காத பட்சத்தில் ஸலாத்துல் லைல் நிறைவேற்றினீர்களா? (34) அவ்வாபீன் அல்லது இஷ்ராக் மற்றும் ச்சாஷ்த் ஆகிய நஃபில் தொழுகைகளைத் தொழுதீர்களா? (35) இன்று நீங்கள் அஸர் அல்லது இஷா தொழுகைக்கு முந்தைய சுன்னத்துகளைத் தொழுதீர்களா? (36) தனித்துவ முயற்சியின் மூலமாக தஃவதே இஸ்லாமியின் 12 தீனுடைய பணிகளில் குறைந்தது ஒரு தீனுடைய பணியின் பக்கமாவது ஆர்வம் ஊட்டினீர்களா? (37) மற்றவர்களிடம் இரவலாகக் கேட்டு ஏதேனும் ஒரு பொருளை (உதாரணமாக: செருப்பு, சால்வை, மொபைல் போன், சார்ஜர், வாகனம் போன்றவை) பயன்படுத்த வில்லையே? (38) பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் மூட்டுதல்/ அதைச் செவியுறுவதிலிருந்து பாதுகாப்பாக இருந்தீர்களா? (39) குறிப்பிட்ட நேரமாவது "மதனி சேனல்" பார்த்தீர்களா? (40) எவரேனும் ஒருவர் அல்லது சிலருடன் உலக ரீதியாக தனிப்பட்ட நட்பு வைத்துள்ளீர்களா?
(41) கடன் இருக்கும் பட்சத்தில் (அதைத் திருப்பிச் செலுத்தும் வசதி இருந்தும்) கடன் கொடுத்தவரின் அனுமதியின்றி கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்யவில்லையே? மேலும் யாரிடமாவது தற்காலிகமாக (Temporary) வாங்கிய பொருளைத் தேவை முடிந்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா? (42) இன்று நீங்கள் மனசாட்சிக்கு விரோதமாக பணிவான வார்த்தைகளை கூறி நயவஞ்சகம், முகஸ்துதி போன்ற பாவத்தை செய்ய வில்லையே? உதாரணமாக மக்கள் மனதில் தன் கண்ணியத்தை உருவாக்குவதற்காக “நான் அற்பமானவன், மிக மோசமானவன்” என்று கூறுவது. ஆனால் உள்ளத்தில் அவ்வாறு நினைப்பதில்லை. (43) சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணக் கூடியவராகவும், மரியாதையுடையவராகவும் இருக்கிறீர்களா? (44) ஒரு முஸ்லிமின் குறை வெளிப்பட்டு விடும்போது (மார்க்க ரீதியான அனுமதியின்றி) அவரது
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami