Share this link via
Personality Websites!
474593
9293
(8) நாளையும் நல்அமல்களின் பதிவேட்டை நிரப்புவேன். (அதாவது செயல்களை சுயபரிசோதனை செய்வேன்)
(9) கடமைக்காகக் கட்டங்களை நிரப்பாமல், முறையான சுயபரிசோனையுடன் நல்அமல்கள் பதிவேட்டை நிரப்புவேன்.
இன்று எந்தெந்த நற்செயல்களைச் செய்யும் பாக்கியம் பெற்றீர்களோ, கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் சரி (அதாவது தலைக்கீழ் ரைட் மார்க்) குறியீடும், செய்யாத பட்சத்தில் (0) குறியீடும் இடவும்.
கவனம்: உங்களது பதிவேட்டை மட்டுமே கவனித்தவாறு சுயபரிசோதனை செய்யுங்கள்.
* கூட்டு சுயபரிசோதனையின் முறை (72 நல்அமல்கள்)
(1) நல்ல நல்ல நிய்யத்துகள் செய்தீர்களா? (2) ஐந்து நேர தொழுகைகளையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா? (3) வீடு, கடைவீதி, மார்க்கெட் போன்ற எங்கு நீங்கள் இருந்தாலும், அங்கு தொழுகை நேரங்களில் தொழுகைக்கு முன்னதாக தொழுகையின் பக்கம் (மக்களை) அழைத்தீர்களா? (4) இரவில் சூரதுல் முல்க் ஓதினீர்களா அல்லது செவியுற்றீர்களா? (5) ஐந்து நேர தொழுகைகளுக்குப் பிறகு குறைந்தது ஒரு முறையாவது ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் இக்லாஸ் மற்றும் தஸ்பீஹ் பாத்திமா رَضِیَ اللہُ عَنْہا ஓதினீர்களா? (6) கன்zஸுல் ஈமான் மஅ கzஸாஇனுல் இர்ஃபான் அல்லது நூருல் இர்ஃபானிலிருந்து குறைந்த பட்சம் மூன்று வசனங்கள் பொருள் மற்றும் விளக்கவுரையுடன் படித்தீர்களா அல்லது கேட்டீர்களா? அல்லது ஸிராதுல் ஜினானிலிருந்து குறைந்த பட்சம் இரண்டு பக்கங்களை படித்தீர்களா அல்லது கேட்டீர்களா? (7) ஷஜராவின் அவ்ராத்களில் ஏதேனும் சிலவற்றை ஓதினீர்களா? (8) குறைந்தது 313 முறை ஸலவாத் ஓதினீர்களா? (9) கண்களை பாவங்களிலிருந்து (அதாவது தவறான பார்வை, திரைப்படங்கள், நாடகங்கள், மொபைலில் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள், அந்நியப் பெண்கள் மற்றும் கசின்கள் (உறவினர்கள்) போன்றோரைப் பார்ப்பதிலிருந்து) பாதுகாத்தீர்களா? (10) காதுகளை பாவங்களிலிருந்து அதாவது புறம் பேசுதல், இசை மற்றும் பாடல்கள், கெட்ட மற்றும் ஆபாசமான பேச்சுகள், மொபைலின் மியூசிக் ரிங்டோன் மற்றும் காலர் டியூன் போன்றவற்றைச் செவியுறுவதிலிருந்து பாதுகாத்தீர்களா?
(11) பாதையில் நடந்து செல்லும் போதோ அல்லது கார், பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போதோ வீணான பார்வைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து, இன்று உங்களது பார்வைகளைத் தாழ்த்தி வைத்தீர்களா? மேலும் தேவையின்றி அங்குமிங்கும் பார்ப்பதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொண்டீர்களா? (12) அஃலா ஹழ்ரத்رَحمۃُ اللہِ عَلَیْہ அல்லது மக்தBபதுல் மதீனாவின் ஏதேனும் ஒரு புத்தகம் அல்லது சிறுநூல் அல்லது "ஃபைzஸானே மதீனா மாத இதழை" குறைந்தது 12 நிமிடங்கள் படித்தீர்களா அல்லது செவியுற்றீர்களா? (13) பேச்சுவார்த்தைகள், போன் உரையாடல்கள் மற்றும் வேலைகளை நிறுத்தி விட்டு அதான் மற்றும் இகாமத்திற்குப் பதில் கூறினீர்களா? (14) (வீட்டிலோ அல்லது வெளியிலோ) எவர் மீதாவது கோபம் வரும் பட்சத்தில் மௌனமாக இருந்து கோபத்திற்குச் சிகிச்சை அளித்தீர்களா அல்லது பேசிவிட்டீர்களா? (15) உங்களது செயல்களைச் சுயபரிசோதனை செய்தவாறு நல்அமல்களின் பதிவேட்டில் உள்ள கட்டங்களை நிரப்பினீர்களா? (16) "மர்கzஸி மஜ்லிஸே சூரா"வின் விதிமுறைகளின் படி உங்களது பொறுப்பாளருக்கு கீழ்ப்படிந்தீர்களா? (17) வீட்டிலும் வெளியிலும் ஒவ்வொரு சிறியவர் மற்றும் பெரியவரிடமும் நல்ல முறையில் அதாவது 'நீங்கள்', 'ஜனாப்' மற்றும் 'ஆம்' என்று கூறி உரையாடினீர்களா? (18) மத்ரஸதுல் மதீனா (பெரியவர்களுக்கான பிரிவில்) குர்ஆன் ஷரீஃப் ஓதினீர்களா அல்லது ஓதிக் கொடுத்தீர்களா? (19) இஷா ஜமாஅத்திற்குப் பிறகு இரண்டு மணி நேரத்திற்குள்
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami