Share this link via
Personality Websites!
474575
9293
* மார்க்க கல்வியைப் பெறுவதற்காக முழு பயானையும் கேட்பேன். * மரியாதையுடன் அமர்வேன். * பயான் நிகழும்போது சோம்பேறித்தனத்திலிருந்து தவிர்ந்துக் கொள்வேன். * எனது சீர்திருத்தத்திற்காக பயானைக் கேட்பேன். * நான் கேட்பதை மற்றவர்களுக்கு எத்திவைக்க முயற்சிப்பேன். انِ شاءَ اللہ
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சுருக்கமான அறிமுகம்
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! 25 ஸஃபருல் முழஃப்பர் நம்முடைய வழிகாட்டியும், சுன்னத் வல் ஜமாஅத்தினரின் தலைவருமான அஃலா ஹழ்ரத், இமாமே அஹ்லே சுன்னத், ஷாஹ் இமாம் அஹ்மத் ரZஸா கான் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் உர்ஸ் (நினைவு) நாளாகும். அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ யார்?
* அவர் ஆஷிகீன்களின் இமாம் ஆவார் *சுன்னத் வல் ஜமாஅத்தினரின் இமாம் ஆவார் *மார்க்க அறிஞர்களின் இமாம் *வணக்கசாலிகளின் இமாம் *பற்றற்றவர்களின் இமாம் *தக்வா (இறையச்சம்) உடையவர்களின் இமாம் * சமகாலத்தில் வாழ்ந்த சட்டவல்லுநர்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் ஆகியோரின் இமாம் ஆவார் *அவர் ஒரு முஜத்தித் (மார்க்கத்தை நிலை நிறுத்தியவர்) ஆவார் *முஃபஸ்ஸிர் ஆவார் *முஹத்திஸ் ஆவார் *மாபெரும் பேரறிஞர் (Scholar) ஆவார் * மிகச்சிறந்த புத்திசாலி (Intelligent) முஃப்தி ஆவார் * குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ் ஆவார் *இவை அனைத்திற்கும் மேலாக, இன்னுயிர் முஸ்தஃபா صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களின் உண்மையான ஆஷிக் ஆவார்.
10 ஷவ்வால் 1272 ஹிஜ்ரி அதாவது 14 ஜூன் 1856 அன்று இந்தியாவின் பரேலி நகரில் அவர்களுடைய பிறப்பு நிகழ்ந்தது * அவர்கள் ஒரு மார்க்க மற்றும் கல்விசார் குடும்பத்தின் விளக்காக இருந்தார்கள் *அவர்களின் பெயர் முஹம்மத் ஆகும், அதேசமயம் அவர்களுடைய பாட்டனார் அவர்களை அஹ்மத் ரZஸா என்று அழைத்து வந்தார்கள், பின்னர் இதே பெயரிலேயே அவர்கள் பிரபலமானார்கள். * 4 வயதிலேயே திருக்குர்ஆனை பார்த்து ஓதி முடித்து விட்டார்கள் *வெறும் 13 வருடங்கள் 10 மாதங்கள் 4 நாட்கள் வயதிலேயே மார்க்கக் கல்வியை நிறைவு செய்து, முதல் ஃபத்வாவை எழுதினார்கள். * கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட துறைகளில் ஏறத்தாழ 1000 புத்தகங்களை எழுதியுள்ளார்கள். * திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பான 'கன்Zசுல் ஈமான்' * 'ஃபதாவா ரZஸவிய்யா' * 'ஹதாயிகே பக்ஷிஷ்' ஆகியவை அவர்களுடைய கல்வி மற்றும் இலக்கிய வரலாற்றுச் சாதனைகளாகும். *அவர்கள் رَحمۃُ اللہِ عَلَیْہ 2 முறை ஹஜ் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள். * இரண்டாவது முறை ரசூலுல்லாஹி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களின் ரவ்ழா ஷரீஃபிற்கு முன்னிலையான போது, கண்மணி நாயகம் صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் விழித்திருக்கும் கண்களோடு அவர்களுக்கு தங்களின் திருக்காட்சியைக் காட்டி அருளினார்கள். *இறையச்சமும், பேணுதலும் எந்தளவுக்கு இருந்தது என்றால், ஃபர்ளுகள் மற்றும் வாஜிபுகளைக் கடுமையாகப் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், சுன்னத்துகள், நஃபில்கள் மற்றும் முஸ்தஹப்பாத்துகளையும் கூட அவர்கள் கைவிடவில்லை. *குறைவாகவே
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami