Share this link via
Personality Websites!
474592
9293
பேரவையில் தனக்கான வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, அவ்வாறே ஸலாம் கூறி விட்டுத் திரும்ப வேண்டும். (ஃபதாவா ரளவிய்யா, 9/522)
* Zஸியாரத்தின் ஒழுக்கங்களைப் பேணியவாறு, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மZஸாரை Zஸியாரத் செய்யுங்கள்.
* சாத்தியமான வரை வுழுவுடன் இருங்கள்.
* Zஸியாரத்திற்காக செல்லும்போது வுழு செய்துக்கொண்டு செல்லுங்கள், மேலும் திக்ரு மற்றும் ஸலவாத்தை சதாவும் மொழிந்தவாறு இருங்கள்.
(மZஸாராதே அவ்லியா கி ஹிகாயாத், பக்கம்: 7)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
* அறியாமையிலிருந்து பாதுகாப்புத்தேடும் துஆ:
தஃவதே இஸ்லாமியின் வாராந்திர சுன்னத்துகள் நிறைந்த இஜ்திமாவின் அட்டவணைப்படி "அறியாமையிலிருந்து பாதுகாப்பு தேடும் துஆ" மனனம் செய்து வைக்கப்படும். அந்த துஆ இதோ:
اَعُوْذُ بِاللہِ اَنْ اَکُوْنَ مِنَ الْجَاہِلِیْنَ
தர்ஜுமா கன்Zஸுல் இர்ஃபான்: "நான் அறியாதவர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."
(ஃபைZஸானே துஆ, பக்கம்: 245)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
* கூட்டு சுயபரிசோதனையின் முறை (72 நல்அமல்கள்)
முஸ்தஃபா صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் பொன்மொழி: (மறுமையின் விஷயத்தில்) ஒரு கணம் சிந்திப்பது 60 வருடங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். (ஜாமிஉஸ் ஸஙீர் லிஸ்ஸுயூத்தி, பக். 365, ஹதீஸ்: 5897)
வாருங்கள்! நல்அமல்களின் பதிவேட்டை நிரப்புவதற்கு முன், "நல்ல நல்ல நிய்யத்துகளைச்" செய்து கொள்வோம்.
(1) அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக நானும் நல்அமல்களின் பதிவேட்டைக் கொண்டு சுயபரிசோதனை செய்வேன், மற்றவர்களுக்கும் இதன் மீது ஆர்வம் ஊட்டுவேன்.
(2) எந்த நல்அமல்கள் நிறைவேற்றப்பட்டனவோ, அதற்காக அல்லாஹ்விற்கு புகழாரம் (அதாவது நன்றி) செலுத்துவேன்.
(3) எவற்றைச் செய்ய முடியாமல் போனதோ, அதற்காக வருந்துவதோடு இனிவரும் காலங்களில் செய்ய முயற்சிப்பேன்.
(4) பாவங்களிலிருந்து பாதுகாக்கும் ஏதேனும் ஒரு நல்அமல் மீது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் செயல்பட முடியாமல் போயிருந்தால், தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்வதோடு, இனிவரும் காலங்களில் அந்தப் பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பேன்.
(5) தேவையின்றி எனது நல்அமல்களைப் பற்றி (உதாரணமாக: இன்னின்ன அல்லது இத்தனை நல்அமல்களை நான் செய்துள்ளேன் என்று) வெளிப்படுத்த மாட்டேன்.
(6) எந்த நல்அமல்களைப் பின்னர் செய்ய முடியுமோ (உதாரணமாக: இன்று 313 முறை ஸலவாத் ஓதவில்லை என்றால்), அதனைப் பின்னரோ அல்லது நாளையோ செய்து முடிப்பேன்.
(7) நல்அமல்கள் பதிவேட்டை நிரப்புவதன் அசல் நோக்கத்தை (உதாரணமாக: இறையச்சம், தக்வா, ஒழுக்கங்களைச் சீரமைத்தல், தீனுடைய பணிகளில் முன்னேற்றம் போன்றவற்றை) அடைய முயற்சிப்பேன்.
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami