Share this link via
Personality Websites!
474591
9293
உம்மத்தினருக்கு பரிந்துரை செய்பவரான பெருமானார் صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் மகத்தான பொன்மொழி: எவரொருவர் இவ்வாறு ஸலவாத் ஓதுகிறாரோ, அவருக்கு எனது ஷஃபாஅத் (பரிந்துரை) கடமையாகி விடுகிறது."
(அத்தர்ஙீப் வத்தர்ஹீப், பாகம் 2, பக். 329, ஹதீஸ்: 31)
جَزَی اللہُ عَنَّا مُحَمَّدًا مَّا ھُوَ اَھْلُہٗ
ஹழ்ரத் இப்னு அப்பாஸ்رَضِیَ اللہُ عَنْہُمَا அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது, மதீனத்து மாமன்னர் மாநபி صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: இதனை ஓதுபவருக்காக எழுபது மலக்குகள் ஆயிரம் நாட்கள் வரை நன்மைகளை எழுதுகிறார்கள்.
(மஜ்மஉஸ் Zஸவாஇத், கிதாபுல் அத்இயா, 10/254, ஹதீஸ்: 17305)
(2) லைலத்துல் கத்ர் இரவை அடைந்து விட்டது போலாகும்
முஸ்தஃபா صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் பொன்மொழி: யார் இந்த துஆவை 3 முறை ஓதுகிறாரோ, அவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்தவரைப் போலாகும்.
(தாரீக் இப்னு அஸாகிர், 19/155, ஹதீஸ்: 4415)
لَآ اِلٰہَ اِلَّااللہُ الْحَلِیْمُ الْـکَرِیْمُ ،سُبحٰنَ اللہ ِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِیْم
(நம்பிக்கைக்குரிய மற்றும் கண்ணியமிக்க அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அல்லாஹ் தூய்மையானவன், அவன் ஏழு வானங்களுக்கும் மற்றும் மகத்தான அர்ஷுக்கும் அதிபதி ஆவான்.)
வாராந்திர இஜ்திமாக்களின் ஹல்காவின் அட்டவணை (வெளிநாடு), 06 ஆகஸ்ட் 2026
(1): சுன்னத்துகளையும் ஒழுக்கங்களையும் கற்றல்: 5 நிமிடங்கள், (2): துஆ மனனம் செய்தல்: 5 நிமிடங்கள்,
(3): சுயபரிசோதனை (ஜாயிஸா): 5 நிமிடங்கள்,
மொத்த நேரம்: 15 நிமிடங்கள்
மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் மீதமுள்ள ஒழுக்கங்கள்
பிறகு, நல்ல நல்ல நிய்யத்துகளை செய்துக்கொண்ட பின் மZஸாரை நோக்கிப்புறப்பட வேண்டும். மேலும் (Zஸியாரத் செய்பவர் சங்கையான அவ்லியாக்களின் رَحِمَہُمُ اللہُ) புனிதமிக்க மZஸாராத்துகளுக்குச் செல்லும்போது, காலடிப்பகுதி வழியாகச் செல்ல வேண்டும். மேலும், குறைந்தபட்சம் நான்கு (4) முழம் இடைவெளியில் முகத்திற்கு நேராக நின்று, நடுத்தரமான சத்தத்தில் (இவ்வாறு) ஸலாம் கூற வேண்டும்:
اَلسّلَامُ عَلَیْکَ یَاسَیِّدِیْ وَرَحمَۃُ اللّٰہِ وَبَرَکَاتُہٗ،
பிறகு "துரூதே Gகவ்ஸிய்யா" மூன்று முறையும், சூரத்துல் ஃபாத்திஹா ஒரு முறையும், ஆயத்துல் குர்ஸி ஒரு முறையும், சூரத்துல் இக்லாஸ் ஏழு முறையும், மீண்டும் "துரூதே Gகவ்ஸிய்யா" ஏழு முறையும் ஓத வேண்டும். இன்னும் நேரம் இருந்தால், சூரா யாஸீன் மற்றும் சூரா முல்க் ஆகியவற்றையும் ஓதி அல்லாஹ் கரீமிடம் துஆச் செய்யவும்: "யா அல்லாஹ்! இந்த ஓதுதலின் மூலமாக உனது பெருந்தன்மைக்குத் தகுந்தவாறு எனக்கு நன்மையை வழங்குவாயாக, எனது அமலுக்குத் தகுந்தவாறு அல்ல. மேலும், இதனை எனது சார்பாக இந்த அங்கீகரிக்கப்பட்ட அடியாருக்கு அன்பளிப்பாக சேர்த்துக் விடுவாயாக." பிறகு, மார்க்கம் அனுமதித்த நியாயமான தனது தேவை எதுவோ, அதற்காக துஆச் செய்ய வேண்டும். மேலும் மZஸாருடையாரின் ரூஹை அல்லாஹு தஆலாவின்
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami