Share this link via
Personality Websites!
474590
9293
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاہِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
மகான்கள் கூறியுள்ளார்கள்: எவரொருவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவில் (வியாழன் மற்றும் வெள்ளிக்கு இடைப்பட்ட இரவில்) இந்த ஸலவாத்தை தவறாமல் குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஓதுவாரோ, அவர் மரணத்தின் போது மதீனத்து பேரரசர் பெருமானார் صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் தரிசனத்தைப் பெறுவார். மேலும் கப்ரில் நுழையும் போதும், எந்தளவுக்கு என்றால், மதீனத்துப் பேரரசர் மாநபி صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்கள் தனது கருணை நிறைந்த கரங்களால் அவரை கப்ரில் இறக்குவதையும் அவர் காண்பார்.
(அஃபழலுஸ் ஸலவாத் அலா ஸய்யிதிஸ் ஸாதாத், பக். 151 சுருக்கம்)
(2) அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்
اَللّٰہُمَّ صَلِّ عَلٰی سَیِّدِ نَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَّعَلٰی اٰلِہٖ وَسَلِّمْ
ஹழ்ரத் அனஸ் رَضِیَ اللہُ عَنْہُ அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது, மதீனத்து மாவேந்தர் மாநபிصَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்: எவரொருவர் இந்த ஸலவாத்தை ஓதுவாரோ, அவர் நின்றுக்கொண்டிருந்தால் உட்காருவதற்கு முன்பாகவும், உட்கார்ந்திருந்தால் எழுந்து நிற்பதற்கு முன்பாகவும் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். (அஃப்ழலுஸ் ஸலவாத் அலா ஸய்யிதிஸ் ஸாதாத், பக். 65)
(3) ரஹ்மத்தின் எழுபது வாசல்கள்
صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
எவரொருவர் இந்த ஸலவாத்தை ஓதுகிறாரோ, அவர் மீது ரஹ்மத்தின் 70 வாசல்கள் திறக்கப்படுகின்றன. (அல்கவ்லுல் பதீஃ, அல்பாபுஸ் ஸானீ, பக். 277)
(4) ஆறு லட்சம் ஸலவாத்தின் நன்மை
اَللّٰھُمَّ صَلِّ عَلٰی سَیِّدِنَامُحَمَّدٍعَدَدَمَافِیْ عِلْمِ اللّٰہِ صَلَاۃً دَآئِمَۃً ۢبِدَوَامِ مُلْکِ اللّٰہ
ஹழ்ரத் அஹ்மத் ஸாவி رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் சில பெரியார்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: இந்த ஸலவாத்தை ஒரு முறை ஓதுவதன் மூலம் ஆறு லட்சம் ஸலவாத் ஓதிய நன்மை கிடைக்கிறது. (அஃப்ழலுஸ் ஸலவாத் அலா ஸய்யிதிஸ் ஸாதாத், பக். 149)
(5) முஸ்தஃபா صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் நெருக்கம்
اَللّٰہُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدٍکَمَا تُحِبُّ وَتَرْضٰی لَہٗ
ஒரு நாள் ஒரு மனிதர் வந்தார், அப்போது பெருமானார் صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்கள் அவரை தமக்கும் அபூபக்கர் ஸித்தீக் رَضِیَ اللہُ عَنْہُ அவர்களுக்கும் இடையில் அமர வைத்தார்கள். இதனால் ஸஹாபாப் பெருமக்கள்رَضِیَ اللہُ عَنْہُم அவர்களுக்கு, இவ்வளவு கண்ணியமிக்க பதவியில் இருக்கும் நபர் யார்! என்று ஆச்சரியம் ஏற்பட்டது. அவர் சென்றுவிட்ட போது, பெருமானார் صَلَّی اللّٰہُ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: இவர் என் மீது ஸலவாத் ஓதும்போது, இவ்வாறு ஓதுகிறார்.
(அல்கவ்லுல் பதீஃ, அல்பாபுல் அவ்வல், பக். 125)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
(6) ஷஃபாஅத் (பரிந்துரையின்) ஸலவாத்
اَللّٰہُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدٍ وَّاَنۡزِلۡہُ الۡمَقۡعَدَ الۡمُقَرَّبَ عِنۡدَکَ یَوۡمَ الۡقِیَامَۃِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami