Share this link via
Personality Websites!
474589
9293
என்ற புத்தகங்களையும் மேலும் "163 மதனி முத்துக்கள்" இன்னும் "101 மதனி முத்துக்கள்" ஆகிய இரண்டு சிறுநூல்களையும் வாங்கிப் படியுங்கள்.
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللّٰہُ عَلٰی مُحَمَّد
மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் ஒழுக்கங்கள்
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! வாருங்கள்! மக்தBபதுல் மதீனாவின் சிறுநூலான "மZஸாராதே அவ்லியா கி ஹிகாயாத்" என்பதிலிருந்து மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் முறை மற்றும் அதன் மதனி முத்துக்களைக் கேட்போம்:
சங்கையான அவ்லியாக்களின்رَحْمَۃُ اللّٰہ عَلَیْہم اجمعین புனிதமிக்க மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதும், அவர்களிடமிருந்து ஃபைZஸ் (அருளாசி) பெறுவதும் முன்னோர்களின் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. எவ்வாறெனில், ஹன்பலி ஃபிக்ஹைப் பின்பற்றுபவர்களின் ஷெய்கான இமாம் கல்லால் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் கூறுகிறார்கள்: "எனக்கு எப்போதெல்லாம் ஏதேனும் ஒரு காரியம் அல்லது சிக்கல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் இமாம் மூஸா காழிம் பின் ஜஃபர் சாதிக் رَضِیَ اللّٰہُ عَنْہُ அவர்களின் மZஸாருக்குச் சென்று அவர்களின் வஸீலாவை முன்வைப்பேன். அல்லாஹ் கரீம் எனது கஷ்டத்தை எளிதாக்கி, நான் நாடியதை எனக்குத் தந்து விடுகிறான்." (தாரீகே பக்தாத், 1/133)
* ஹழ்ரத் இமாம் ஷாஃபிஈ رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் கூறுகிறார்கள்: "எனக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்படும்போது, நான் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு, இமாமே அஃளம் அபூ ஹனீஃபா رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் மZஸாருக்குச் சென்று துஆக் கேட்பேன்; அல்லாஹ் கரீம் எனது தேவையை நிறைவேற்றித் தருகிறான்."
(அல் கைராதுல் ஹிஸான், பக்கம்: 230)
(யாரேனும் ஒருவர் இறைநேசரின் மZஸார் ஷரீஃபிற்கு அல்லது) எந்தவொரு முஸ்லிமின் கப்ரை Zஸியாரத் செய்வதற்கு செல்ல விரும்பினால், முஸ்தஹப் (விருப்பத்தக்கது) என்னவென்றால்: முதலில் தனது இல்லத்தில் (மக்ரூஹ் இல்லாத நேரத்தில்) இரண்டு (2) ரக்அத் நஃபில் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவிற்குப் பிறகு ஒரு (1) முறை ஆயத்துல் குர்ஸியையும், மூன்று (3) முறை சூரத்துல் இக்லாஸையும் ஓதி, அந்தத் தொழுகையின் நன்மையை அந்த கப்ருடையாருக்கு அனுப்ப வேண்டும். அல்லாஹ் கரீம் மரணித்த அந்த அடியாரின் கப்ரிலே ஒளியை ஏற்படுத்துவான், மேலும் இந்த (நன்மையை அனுப்பிய) நபருக்கு மிக அதிகமான நன்மையை வழங்குவான். (ஃபதாவா ஆலம்கீரி, 5/350)
மZஸாராத்துகளுக்கு சமூகமளிப்பதன் மீதமுள்ள ஒழுக்கங்கள் தர்பிய்யத் ஹல்காக்களில் விவரிக்கப்படும், எனவே அவற்றை அறிந்துக் கொள்வதற்காக தர்பிய்யத் ஹல்காக்களில் கண்டிப்பாக கலந்துக் கொள்ளுங்கள்.
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
தஃவதே இஸ்லாமியின் வாராந்திர சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் ஓதப்படும் 6 ஸலவாத்களும் 2 துஆக்களும்
(1) வெள்ளிக்கிழமை இரவின் ஸலவாத்
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِکْ عَلٰی سَیِّدِنَا مُحَمَّدِ نِالنَّبِیِّ الْاُمِّیِّ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami