Share this link via
Personality Websites!
474587
9293
(4) மக்தBபதுல் மதீனாவால் வெளியிடப்பட்ட "மீலாத் விழாவின் 12 குறிப்புகள்" என்ற பிரசுரத்தை (Pamphlet) முடிந்தால் 112, இல்லையெனில் குறைந்தபட்சம் 12 பிரதிகளாவது, அதேபோல் சாத்தியமானால் "விடிகாலை வசந்தம்" எனும் சிறுநூலின் 12 பிரதிகளை மக்தBபதுல் மதீனாவில் இருந்து விலைக்கு வாங்கி விநியோகம் செய்யுங்கள். குறிப்பாக, நபிகள் நாயகத்தின் صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم பிறந்தநாள் விழாக்களை விமரிசையாக ஏற்பாடு செய்யும் அமைப்புகளின் தலைவர்களிடம் இவற்றைச் கொண்டு போய்ச் சேர்க்கவும்.
(5) ரபிஉல் அவ்வல் 12-ஆம் இரவை மீலாத் இஜ்திமாவில் கழித்து விட்டு, சுப்ஹு ஸாதிக் (அதிகாலை) வேளையில் உங்களுடைய கரங்களில் மதனி கொடிகளை ஏந்தி, ஸலவாத் மற்றும் ஸலாமுடன், கண்ணீர் மல்கும் கண்களுடன் விடிகாலை வசந்தத்தை (சுப்ஹே பஹாராவை) வரவேற்கவும். ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு, ஸலாம் மற்றும் ஈத் முபாரக் கூறி ஒருவரையொருவர் நல்வாழ்த்துகளுடன் கட்டித்தழுவி சந்தித்துக் கொள்ளுங்கள்; மேலும் நாள் முழுவதும் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டும், பெருநாள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டும் இருங்கள்.
(6) அன்பான வள்ளல் நபி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நோன்பு நோற்று தங்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். நீங்களும் நபிகள் நாயகம் صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களின் நினைவோடு ரபிஉல் அவ்வல் 12ல் நோன்பு நோற்று, மதனி கொடியை ஏந்தியவாறு மீலாத் ஊர்வலத்தில் (ஜுலூஸில்) பங்கெடுங்கள். முடியுமான வரை வுழுவுடன் இருங்கள். உதடுகளில் கஸீதாக்கள், ஸலவாத் மற்றும் ஸலாமினை மொழிந்தவர்களாக, பார்வைகளை தாழ்த்தியவாறு கண்ணியமான முறையில் நடந்துச் செல்லுங்கள். அங்குமிங்கும் குதித்து அநாகரிகமாக நடந்து, யாருக்கும் விமர்சிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விடாதீர்கள்.
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ عَلٰی مُحَمَّد
நல்அமல் எண் 12-க்கான ஆர்வமூட்டுதல்
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஃலா ஹழ்ரத் அவர்களின் அருட்கொடையை அடைந்துக் கொள்வதற்காக, தஃவதே இஸ்லாமியின் மார்க்கச் சூழலோடு இணைந்துக் கொள்ளுங்கள்! 12 மார்க்கப் பணிகளில் மிக உற்சாகமாக நடைமுறை ரீதியாக பங்கெடுங்கள்.! اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! தீன் மற்றும் துன்யாவின் ஏராளமான பரகத்துகள் உங்களுக்குக் கிடைக்கும். கவலைமிக்க விடயம்! சுயநலம் மிக்க இன்றைய காலகட்டத்தில், மார்க்கக் கல்வியை கற்பதற்கு மக்களிடம் நேரமில்லை. الحمد للہ! தற்காலத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வழிகாட்டியான ஷெய்கே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ அவர்கள், குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தில் பாவங்களிலிருந்து தவிர்ந்திருப்பதற்கும், நன்மைகள் செய்வதற்கும் மற்றும் எளிதாக மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதற்கும் "72 நல் அமல்கள்" என்ற பெயரிலான பதிவேட்டை நமக்கு வழங்கியுள்ளார்கள். இந்த நல்அமல்களில் 12-வது நல்அமல் என்னவென்றால்: இன்று நீங்கள் அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அல்லது மக்தBபதுல் மதீனாவின் ஏதேனும் புத்தகம் அல்லது சிறநூலை அல்லது "ஃபைzஸானே மதீனா மாதஇதழை" குறைந்தபட்சம் 12 நிமிடங்களாவது படித்தீர்களா அல்லது கேட்டீர்களா? இந்த நல்அமலைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் நமது கல்வியில் அபிவிருத்தி ஏற்படும், மார்க்கக் கல்வியைக் கற்பதன் சிறப்புகளும் பரகத்துகளும் நஸீபாகும். அல்லாஹு தஆலா
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami