Share this link via
Personality Websites!
474586
9293
இருந்தது; உள்ளத்தில் என்ன இருக்குமோ, அதைத்தான் நாவிலும் கொண்டு வருவார்கள், நாவினால் எதைக் கூறுவார்களோ, அதன்படி அமலும் செய்வார்கள். *மார்க்க விஷயங்களில் யாருக்கும் எவ்வித சலுகையும் (அதாவது பாரபட்சமும்) காட்ட மாட்டார்கள். * நாயகத்தின் ஆஷிகீன்களான உலமாக்களை (மார்க்க அறிஞர்களை) சந்திக்கும் போது, அவர்களைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அவர்களுக்குப் பெரும் மரியாதை அளிப்பார்கள். *யாராவது சங்கையான பைத்துல்லாஹ்வின் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்தால், அவரிடம் முதலில், "அகிலத்தின் தலைவரான அண்ணல் நபி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களின் புகலிடமான சமூகத்திற்குச் சென்று வந்தீர்களா?" என்று கேட்பார்கள். அவர் 'ஆம்' என்று கூறினால், உடனே அவரது பாதங்களை முத்தமிடுவார்கள். *மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்தநாள்) விழாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை அத்தஹிய்யாத் அமர்வில் (இரு முழங்கால்களையும் மடக்கி) அமர்ந்திருப்பார்கள், இறுதியில் ஸலவாத்தும் ஸலாமும் ஓதும் போது மட்டுமே எழுந்து நிற்பார்கள். *அவர்களின் இல்லத்து வாசலில் இருந்து எந்தவொரு தேவையுடையவரும் வெறுங்கையோடு திரும்புவதில்லை.
(ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 112, 113)
அல்லாஹு தஆலா நமக்கும் இத்தகைய அழகான நல்ல பழக்கவழக்கங்களை நம் வாழ்வில் பின்பற்றுவதற்கும், சுன்னத்துகளைக் கற்றுக்கொண்டு, அதனை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் பாக்கியத்தையும் வழங்குவானாக.
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! الحمد للہ! மகிழ்ச்சிகள் நிறைந்த ரபிஉல் அவ்வல் மாதம் வரவிருக்கின்றது. அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், ஹழ்ரத் அல்லாமா மவ்லானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ அவர்கள், மீலாத் விழாவைக் கொண்டாடும் ஆஷிகானே மீலாதுகளுக்கு (நபிகள் நாயகத்தின் நேசர்களுக்கு) தங்களின் கடிதத்தின் (Letter) வாயிலாக சில முக்கியக் குறிப்புகளை வழங்கியுள்ளார்கள். வாருங்கள்! சில குறிப்புகளை நாமும் கேட்டறிவோம்.
அத்தாரின் கடிதத்தின் முக்கியக் குறிப்புகள்
(1) பிறை இரவன்று மஸ்ஜிதுகளில் இந்த வார்த்தைகளைக் கொண்டு மூன்று (3) முறை அறிவிப்புச் செய்ய வையுங்கள்: "அனைத்து நாயகத்தின் நேசர்களுக்கு வாழ்த்துகள், சங்கையான ரபிஉல் அவ்வல் மாதத்தின் பிறை தென்பட்டு விட்டது."
(2) மேற்பார்வையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து நாயகத்தின் நேசர்களும் ரபிஉல் அவ்வல் ஷரீஃபில் பிரத்தியேகமாக குறைந்தபட்சம் மூன்று (3) நாட்கள் காஃபிலாவில் பயணம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இஸ்லாமிய சகோதரிகள் ஒரு மாதம் வரை தினமும் வீட்டிற்குள் (அதாவது வீட்டின் இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் மஹ்ரம்களுக்கு மத்தியில் மாத்திரம்) 'மதனி தர்ஸ்' நடத்த வேண்டும், மேலும் எதிர்வரும் காலங்களிலும் அதனைத் தினமும் தொடர்வதற்கு நிய்யத் செய்துக்கொள்ளுங்கள்.
(3) கொடியில் நஃலே பாக் (நபிகள் நாயகத்தின் புனித பாதணி) முத்திரை அல்லது ஏதேனும் எழுத்துக்கள் இருந்தால், அது கிழிந்து நாராகிவிடக் கூடாது என்பதிலும், தரையில் விழுந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருங்கள். மேலும், ரபிஉல் அவ்வல் மாதம் முடிந்தவுடன் அதனை உடனடியாக இறக்கி விடுங்கள். உங்களால் பாதுகாக்க முடியாமல், மரியாதை குறைவு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் இருந்தால், சாதாரண மதனி கொடியை ஏற்றுங்கள். (அமீரெ அஹ்லுஸ் ஸுன்னத் عُفِیَ عَنْہ அவர்களும் தனது இல்லத்தில் சாதாரண மதனி கொடியையே ஏற்றுகிறார்கள்.)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami