Share this link via
Personality Websites!
474585
9293
திருக்குர்ஆனை ஓதுவதற்கு நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் * ஜனாஸா தொழுகை அறிந்திருக்க வேண்டும் * தூங்குவது, விழிப்பது *உண்பது, குடிப்பது * வீட்டிற்குள் நுழைவது * வீட்டிலிருந்து வெளியேறுவது இதுபோன்ற சில சுன்னத்துகளும் நமக்கு மனப்பாடமாக இருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கான ஒரு எளிய வழியைக் கூறட்டுமா? الحمد للہ! நாயகத்தின் ஆஷிகீன்களுடைய மார்க்க அமைப்பான தஃவதே இஸ்லாமி, ஒவ்வொரு கணமும் நமக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. நாயகத்தின் ஆஷிகீன்கள் * மஸ்ஜிதுகள் *கடைகள் *தொழிற்சாலைகள் * பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் போன்றவற்றிலும், 'மத்ரஸதுல் மதீனா பாலிஙான் நடத்துகிறார்கள். * மத்ரஸதுல் மதீனா பாலிஙானில் பெரிய வயதுடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் சரியான தஜ்வீத் மற்றும் கிராஅத்துடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது. * வுழு, குளிப்பு, தொழுகை மற்றும் ஜனாஸா தொழுகையின் ஏனைய சட்டத்திட்டங்களும் வழிகாட்டுதல்களும் கற்றுக்கொடுக்கப் படுகின்றன. *சுன்னத்துகளும் கற்றுத்தரப்படுகின்றன, மேலும் * மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையை படிப்பதற்கும் கேட்பதற்குமான வாய்ப்பும் கிடைக்கிறது. *புனித ஹதீஸில் வந்துள்ளது: "உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று, அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவரே ஆவார்."
(புகாரி, கிதாபு ஃபழாஇலில் குர்ஆன், பக்கம்: 1299, ஹதீஸ்: 5027)
* மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது: "யாரொருவர் திருக்குர்ஆனைக் கற்று, கற்றுக்கொடுத்து, மேலும் திருக்குர்ஆனில் உள்ளவற்றின் மீது அமல் செய்கிறாரோ, திருக்குர்ஆன் அவருக்காக பரிந்துரை செய்யும் இன்னும் அவரை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும்." (கன்Zசுல் உம்மால், கிதாபுல் அத்கார், பாகம்: 1, பக்கம்: 266, ஹதீஸ்: 2373)
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! இன்றே உங்கள் அருகில் நடைபெறும் 'மத்ரஸதுல் மதீனா பாலிஙானில் நுழைவை (அட்மிஷன்) பெற்றுக்கொள்ளுங்கள்! اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! இறைநேசர்களின் அருட்கொடை நஸீபாகும், சுன்னத்துகளைக் கற்றுக் கொள்வீர்கள், மேலும் உலகம் முழுவதும் சுன்னத்துகளின் செய்தியைப் பரப்புபவர்களாக மாறிவிடுவீர்கள். அல்லாஹு தஆலா நமக்கு அமல் செய்யும் பாக்கியத்தை வழங்குவானாக.
அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் இன்னும் சில நல்ல பழக்கவழக்கங்கள்
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! நாம் அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் சில நல்ல மற்றும் அழகான பழக்கவழக்கங்களைப் பற்றிய நல்வார்த்தைகளைக் கேட்டோம், வாருங்கள்! சுருக்கமாக இன்னும் சில நல்ல பழக்கங்களைப் பற்றிக் கேட்போம்.
* அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் உரக்கச் சிரிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள். *கொட்டாவி வந்தால், விரலை பற்களுக்கிடையே அழுத்திக் கொள்வார்கள் மேலும் எந்தச் சத்தமும் எழுப்ப மாட்டார்கள். *வாய் கொப்பளிக்கும் போது, இடது கையை தாடி முடிகளின் மீது வைத்து, தலையைக் குனிந்து வாயிலிருந்து தண்ணீரைக் கீழே விடுவார்கள். *கிப்லாவை நோக்கி ஒருபோதும் எச்சில் துப்ப மாட்டார்கள். *கிப்லாவை நோக்கி கால்களை நீட்ட மாட்டார்கள். *தலைப்பாகை அணிந்து தொழுகைகளைத் தொழுவார்கள். *மிஸ்வாக் செய்வார்கள். *அவர்களின் வெளிப்பகுதியும் உள்மனமும் ஒன்றாகவே
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami