Share this link via
Personality Websites!
474584
9293
ஆண் மற்றும் பெண்ணின் ஜனாஸா தொழுகைக்கான துஆ எது? *பருவமடையாத சிறுவன் மற்றும் சிறுமியின் ஜனாஸா தொழுகைக்கான துஆ எது? இவை அனைத்தும் நமக்குத் தெரியுமா? கவலை என்னவென்றால்! நாம் மார்க்கத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்று விட்டோம் என்றால், இன்று பல முஸ்லிம்களுக்கு ஜனாஸா தொழுகையின் முறை தெரிவதில்லை. பொதுவாக ஜனாஸா தொழுகை நடக்கும்போது இமாம் அவர்கள் அதன் முறையைக் கற்றுக்கொடுக்கிறார்கள், ஆனால் அடுத்த முறை வரும்போது அது மீண்டும் மறந்து விடுகிறது.
உங்களுக்குத் தெரியுமா? ஜனாஸா தொழுகை என்பது ஃபர்ளு கிஃபாயா ஆகும். எங்காவது மரணம் நிகழ்ந்து, யாராவது ஒருவர் ஜனாஸா தொழுகை தொழுது விட்டாலும், அனைவரின் மீதிருந்த கடமையும் நீங்கி விடும். ஒருவேளை அவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைக்கப்படவில்லை என்றால், இந்தத் தகவல் யார் யாருக்கெல்லாம் சென்றடைந்ததோ, அவர்கள் அனைவரும் பாவிகளாகி விடுவார்கள். (பஹாரே ஷரீஅத், பாகம்: 1, பக்கம்: 825, பகுதி: 4)
மரணித்தவருக்கு மண்ணறையில் வழங்கப்படும் முதல் பரிசு
அன்புத் தலைவர், மக்கி மதனி முஸ்தஃபா صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்களிடம் ஒருவர் கேட்டார்: "ஒரு முஃமின் கப்ரில் நுழையும் போது, அவருக்கு வழங்கப்படும் முதல் பரிசு என்ன?" அதற்கு அண்ணலார் கூறினார்கள்: "அவரது ஜனாஸா தொழுகையை தொழுதவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன."
(ஷுஅபுல் ஈமான், பாகம்: 7, பக்கம்: 7, ஹதீஸ்: 9257)
அல்லாஹ்வின் இறுதித் தூதர், அண்ணல் நபி صَلَّی اللہُ عَلَیْہِ وَ آلِہٖ وَ سَلَّم அன்னவர்கள் கூறினார்கள்: "ஒரு சுவனவாசி மரணித்து விடும்போது, அவரது ஜனாஸாவை சுமந்து சென்றவர்களையும், அவருக்கு பின்னால் நடந்து சென்றவர்களையும் மேலும் அவரது ஜனாஸா தொழுகையை நிறைவேற்றியவர்களையும் வேதனை செய்வதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்."
(முஸ்னத் ஃபிர்தவ்ஸ், பாகம்: 1, பக்கம்: 282, ஹதீஸ்: 1108)
மற்றொரு ஹதீஸ் ஷரீஃபில் வந்துள்ளது: "யாரொருவர் தனது வீட்டிலிருந்து ஜனாஸாவுடன் புறப்பட்டு, ஜனாஸா தொழுகை தொழுது, மேலும் ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை ஜனாஸாவுடனே இருக்கிறாரோ, அவருக்கு 2 கீராத் நன்மைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீராத்தும் உஹத் மலையின் அளவிற்கு நிகரானதாகும். இன்னும் யார் ஜனாஸா தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு திரும்பி விடுகிறாரோ, அவருக்கு ஒரு கீராத் நன்மை உண்டு."
(முஸ்லிம், கிதாபுல் ஜனாஇஸ், பக்கம்: 340, ஹதீஸ்: 945)
பாருங்கள்! இவை எவ்வளவு அழகான சிறப்புகள், ஜனாஸா தொழுகை தொழுவதற்கு எத்தனை நன்மைகள் உள்ளன...!! நாம் யாருடைய ஜனாஸா தொழுகையையாவது தொழுதால், யார் அறிவார் அவர் ஒரு சுவனவாசியாக இருக்கலாம், மேலும் அவரது பொருட்டால் நமக்கும் பாவமன்னிப்பு வழங்கப்பட்டு விடலாம்...!! ஆனால் கவலை என்னவென்றால்! நமக்கு ஜனாஸா தொழுகை தொழவே தெரிவதில்லை, நமக்கு ஜனாஸா தொழுகையின் துஆக்களே மனப்பாடமாக இல்லை.
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! நாம் இந்த விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். الحمد للہ! நாம் முஸ்லிம்கள், ஒரு முஸ்லிமுக்கு இவை அனைத்தும் மிக அடிப்படையான (Basic) விடயங்களாகும். *வுழு செய்யும்முறை நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் *வுழுவின் ஃபர்ளுகள் தெரிந்திருக்க வேண்டும் * ஒழுவின் சுன்னத்துகள் தெரிந்திருக்க வேண்டும் * தொழுகையின் முறை தெரிந்திருக்க வேண்டும் * தொழுகையின் ஃபர்ளுகளும், வாஜிபாத்துகளும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் * சரியான தஜ்வீத் மற்றும் கிராஅத்துடன்
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami