Share this link via
Personality Websites!
474583
9293
மூலம் மய்யித் மீதான தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்துவார்கள். அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் எந்தவொரு பாக்கியசாலியின் ஜனாஸா தொழுகையை நடத்தினாலும், அவர்கள் தங்களின் பலமிக்க பரிந்துரையைக் கொண்டு அவரின் பாவமன்னிப்பைப் பெற்றுத் தருகிறார்களோ என்று அங்கு வந்திருப்பவர்களுக்கு தோன்றும். மேலும் அவர்கள் மிக நீண்ட நேரம் ஜனாஸா தொழுகையை நடத்துவார்கள். இந்தத் தாமதத்திற்கான வெளிப்படையான காரணம், ஹதீஸ்களில் வந்துள்ள துஆக்கள் அனைத்தையும் அவர்கள் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
(ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 181)
ஆஹ்! அவர்கள் எனது ஜனாஸா தொழுகையை நடத்த வேண்டுமே!
ஒரு ஸய்யித் சாஹிப் இருந்தார், அவர் கூறுவார்: ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்க்கை மிகவும் பிரியமானதாகும், மேலும் எனக்கும் எனது வாழ்க்கை மிகவும் பிரியமானதுதான், ஏனெனில் அஃலா ஹழ்ரத் அவர்கள் எனது ஜனாஸா தொழுகையை நடத்தி எனக்கு மன்னிப்பை பெற்றுத் தருவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக. எனது மரணம் அஃலா ஹழ்ரத் அவர்களின் வாழ்நாளிலேயே நிகழ வேண்டும் என்றும், அவர்கள் எனது ஜனாஸா தொழுகையை நடத்த வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன், அது எனது பாவமன்னிப்பிற்கும் விமோசனத்திற்கும் காரணமாக அமையும். (ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 181)
பாவமன்னிப்பு கிடைப்பதற்குக் காரணம் என்னவாக அமைந்தது?
பரேலி ஷரீஃபில் நவாப் அஸீஸ் அஹ்மத் என்ற பெயருடைய ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரின் வாழ்க்கை வெளிப்படையாக நல்ல அமல்களைச் செய்வதில் கழியவில்லை, அவர் மரணித்த போது அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் அவரின் ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். பின்னர் அந்த நவாப் அஸீஸ் அஹ்மத் ஸாஹிப் அவர்களின் மனைவி அவரை கனவில் கண்டார், நவாப் ஸாஹிப் அவர்கள் மிகச் சிறந்த நிலையில் இருப்பதைக் கண்ட அந்த அம்மையார் கேட்டார்: உங்களுடைய மன்னிப்பிற்குக் காரணம் என்னவாக அமைந்தது? நவாப் ஸாஹிப் கூறினார்: அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்கள் எனது ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள் மேலும் எந்தளவு துஆக்கள் செய்தார்கள் என்றால் என்னுடைய எல்லாப் பாவங்களையும் மன்னிக்க வைத்து விட்டார்கள்.!
(ஃபைZஸானே அஃலா ஹழ்ரத், பக்கம்: 181)
سُبْحٰنَ اللہ! எனது அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களின் கண்ணியம் எவ்வளவு மகத்தானது...!!
நாம் ஜனாஸா தொழுகையை கற்றுக்கொண்டு விட்டோமா?
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது! ஜனாஸா தொழுகைக்காக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து துஆக்களும் அஃலா ஹழ்ரத் رَحمۃُ اللہِ عَلَیْہ அவர்களுக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்தன. அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தும்போது, அந்த மரணித்தவருக்கு நன்மையை நாடி, அந்த அனைத்து துஆக்களையும் ஓதிவிடுவார்கள்.
இப்போது சிந்தித்துப் பாருங்கள்: * ஜனாஸா தொழுகையின் ஒரே ஒரு துஆவாவது நமக்கு மனப்பாடமாகத் தெரியுமா? * ஜனாஸா தொழுகையில் ஃபர்ளுகள் எத்தனை? *அதன் ருக்ன் என்ன? *ஜனாஸா தொழுகைக்கு நிய்யத் எவ்வாறு வைக்க வேண்டும்? *ஜனாஸா தொழுகைக்கான ஸனா எது? * பருவமடைந்த
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami