Share this link via
Personality Websites!
474574
9293
اَلْحَمْدُ لِلہِ رَبِّ الْعٰلَمِیْنَ وَالصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی خَاتَمِ النَّبِیّٖن
اَمَّا بَعْدُ! فَاَعُوْذُ بِاللہِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْکَ یَارَسُوْلَ اللہ وَعَلٰی آلِکَ وَاَصْحٰبِکَ یَاحَبِیْبَ اللہ
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْکَ یَانَبِیَّ اللہ وَعَلٰی آلِکَ وَاَصْحٰبِکَ یَانُوْرَ اللہ
نَوَیْتُ سُنَّتَ الْاِعْتِکَاف (மொழிபெயர்ப்பு: நான் ஸுன்னத்தான இஃதிகாஃபின் நிய்யத்தைச் செய்தேன்)
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே! எப்பொழுதெல்லாம் மஸ்ஜிதுக்குள் நுழைகிறீர்களோ, நினைவு வரும்போது இஃதிகாஃபின் நிய்யத் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் எவ்வளவு நேரம் மஸ்ஜிதில் இருப்பீர்களோ அவ்வளவு நேரம் இஃதிகாஃபின் நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். நினைவில் வையுங்கள்! மஸ்ஜிதினுள் உண்பதற்கு, குடிப்பதற்கு, உறங்குவதற்கு அல்லது ஸஹ்ர், இஃப்தார் செய்வதற்கு, எதுவரையெனில், ஸம்ஸம் அல்லது ஓதி ஊதிய தண்ணீரைக் குடிப்பதற்குக்கூட ஷரீஅத்தில் அனுமதியில்லை. எனினும், இஃதிகாஃபின் நிய்யத் இருக்கும் பட்சத்தில் இவை அனைத்தும் அதன் ஒரு பகுதியாக அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடும். இஃதிகாஃபின் நிய்யத்தும் வெறும் உண்பதற்காக, குடிப்பதற்காக அல்லது உறங்குவதற்காக மட்டும் இருக்கக் கூடாது, மாறாக அதன் நோக்கம் அல்லாஹு தஆலாவின் திருப்பொருத்தத்திற்காக இருக்க வேண்டும். "ஃபதாவா ஷாமி"யில் உள்ளது: யாராவது மஸ்ஜிதினுள் உண்ணவோ, குடிக்கவோ, உறங்கவோ விரும்பினால், அவர் இஃதிகாஃபின் நிய்யத்தை செய்துக் கொண்டு, சிறிது நேரம் திக்ருல்லாஹ் (அல்லாஹ்வை திக்ர்) செய்யட்டும், பிறகு அவர் விரும்புவதைச் செய்யட்டும். (அதாவது, இப்போது விரும்பினால் உண்ணலாம், குடிக்கலாம் அல்லது உறங்கலாம்)
பாவிகளுக்கு ஷஃபாஅத் செய்யக்கூடிய பெருமானார் صَلَّی اللہ عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ அன்னவர்களின் அமுதவாக்கு:
مَنْ صَلّٰی عَلَیَّ مِاءَۃً کَتَبَ اللہُ بَیْنَ عَیْنَیْہِ بَرَاءَ ۃً مِّنَ النِّفَاقِ وَبَرَاءَۃً مِّنَ النَّارِ وَاَسْکَنَہُ اللہُ یَوْمَ الْقِیَامَۃِ مَعَ الشُّہَدَاءِ
யார் என் மீது நூறு (100) முறை ஸலவாத் ஓதுகிறாரோ, அல்லாஹ் அவனுடைய இரு கண்களுக்கு இடையே 'இவன் நயவஞ்சகத்திலிருந்தும் இன்னும் நரக நெருப்பிலிருந்தும் விடுதலை பெற்றவன்' என்று எழுதி விடுவான். மேலும், மறுமை நாளில் அவனை ஷுஹதாக்களுடன் வைத்திருப்பான்."
(முஃஜம் அவ்ஸத், 5/252, ஹதீஸ்: 7235)
صَلُّوْا عَلَی الْحَبیب! صَلَّی اللّٰہُ عَلٰی مُحَمَّد
பயான் கேட்பதற்கான நிய்யத்துகள்
முஸ்தஃபா صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهٖ وَسَلَّم அன்னவர்களின் பொன்மொழி:
اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ உண்மையான எண்ணம்தான் மிகச் சிறந்த அமல் ஆகும்.
(ஜாமிஉஸ் ஸஙீர், பக்கம்: 81, ஹதீஸ்: 1284)
நாயகத்தின் ஆஷிகீன்களே! ஒவ்வொரு செயலுக்கும் முன்பாக நல்ல நல்ல நிய்யத்துகள் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில், நல்ல நிய்யத் ஒரு அடியானை சுவர்க்கத்தில் சேர்க்கிறது. பயானைக் கேட்பதற்கு முன்பும் நல்ல நல்ல நிய்யத்துகள் செய்து கொள்ளுங்கள்! உதாரணமாக நிய்யத் செய்யுங்கள்!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami